சேவை வார நிறைவு விழா

கோவை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி துடியலூர் மண்டலம் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 7 நாட்களாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக துடியலூர் மண்டலம் சார்பாக மண்டல தலைவர் V.M. சம்பத்குமார் தலைமையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் வத்சலாவின் ஏற்பாட்டில் 70 கிலோ கேக் வெட்டியும், சுமார் 150 பெண்மணிகளுக்கு சேலை வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மாநகர் மாவட்ட தலைவர் R. நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 800 பேர் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.