பசிப்பிணி போக்க கூடுதல் கவனம் செலுத்தும் கோவை அரிமா சங்கம்

கோயமுத்தூர் மாவட்ட. ஒருங்கிணைந்த  அரிமா 324 B 1 சார்பாக நடைபெற்ற EXCELLENCE தாய்மை 2020 பதவியேற்பு விழாவில், வரும் காலங்களில் பசிப்பிணி போக்குவது, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான புற்று நோய் குறித்த விழிப்புணர்வு என ஹோப்ஸ் எனும் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் பொள்ளாச்சி, உடுமலை, நீலகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அரிமா  324 பி1 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு  EXCELLENCE தாய்மை 2020 விழா கோவை ராம்நகர் பகுதியில் அரிமா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆளுநர் கருணாநிதி அவர்களும், முதல் துணை ஆளுநர் நடராஜன், அவர்களும் இரண்டாம் துணை ஆளுநர் ராம் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலர்கள் பாஸ்கர், ராஜ்மோகன் மற்றும் ராஜகோபால் மற்றும்  பொருளாளர்கள் சீதாராமன்,  மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரிமா 324 B1 ன் மக்கள் தொடர்பு அலுவலர் அரிமா செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் .ZOOM செயலி  இணையதளம் வாயிலாக பதவியேற்பு விழா  நடைபெற்றது.

முன்னதாக விழாவில் பேசிய மாவட்ட ஆளுநர் கருணாநிதி, இந்த வருடம் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் ரூபாய் 10 கோடி மதிப்பிலான சேவைகளை செய்து உலக அளவில் முதன்மை மாவட்டமாக அரிமா  324 பி1 திகழ்வதாகவும், வரும் காலங்களில் ஹோப்ஸ் எனும் ஒருங்கிணைந்த திட்டத்தில் பசிப்பிணி போக்குவது,பார்வை திறன் குறைந்தவர்களுக்கு சிகிச்சை,மற்றும் குழந்தைகள்  புற்று நோய் குறித்து விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக கவனம் செலுத்துவது போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில்,சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் சம்பத் , சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பன்னாட்டு இயக்குனர் இராமசாமி , சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ கிருஷ்ண ஜெகநாதன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.. மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகளை முன்னாள் பன்னாட்டு இயக்குனர் கேஜி ராம கிருஷ்ண மூர்த்தி  பதவியில் அமர்த்தினார்.

இதில், முதல் துணை ஆளுனர், இரண்டாம் துணை ஆளுநர்,மாவட்ட அமைச்சரவை செயலாளர்கள், பொருளாளர்,அனைத்து திட்ட மாவட்ட, மண்டல , வட்டார தலைவர்கள், ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,  என பல்வேறு புதிய பொறுப்புகளில்  உறுப்பினர்கள் பதவியேற்றனர்.