பெரியார் பிறந்தநாள் : தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மரியாதை

கோவை: பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்ட தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 142வது பிறந்த நாள் விழா இன்று (17.9.2020) கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் அப்பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் வெவ்வேறு இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.