அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரணம்

கோவை: அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார் இன்று உ(16.9.2020) அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், ஆரிய வைத்திய பார்மசியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கடந்த 1951ம் ஆண்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர்.

இவர் ஆயுர்வேதா பட்டப்படிப்பை சொர்ணூர் ஆயுர்வேத கல்லூரியில் படித்தவர். இந்திய அரசு இவரது சேவைகளை பாராட்டி கடந்த 2009ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது.

கடந்த 2011ம் ஆண்டு குவேம்பு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தது. ஆயுர் வேத மருத்துவத்தை உலக நாடுகளி கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

68 வயதான கிருஷ்ணகுமாருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் இன்று (16.9.2020) உயிரிழந்தார்.

பழகுவதற்கு இனிமையானவராகவும், கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த கிருஷ்ணகுமாருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.