பாஜக முன்னாள் எம்பி.,க்கு கொரோனா தொற்று

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான முன்னாள் எம்.பி.,யுமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிததுக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவையின் முன்னாள் எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.