கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மேற்கு மண்டலத்தில் வார்டு வாரியாக அனைத்து பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதித்தவர்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் விபரங்களையும், தொற்று பாதித்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படும் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், களப்பணியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன், செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் சுகந்தி, நிர்வாக அலுவலர் உஷா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.