நடிகர் சூர்யா கருத்துக்கு நடிகை காயத்ரிரகுராம் எதிர்ப்பு

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை சுட்டிக் காட்டி நீட் தேர்வுக்கான எதிர்ப்பை அறிக்கையாக வெளியிட்டார் நடிகர் சூர்யா. அவர் கூறும்போது, “நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளைமட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்க்க கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைவோம் குரல் எழுப்புவோம்” என்றார்.

நடிகர் சூர்யா கருத்துக்கு பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரிரகுராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் தங்களது சொந்த செலவில் பேனர் வைத்துக் கொள்கிறார்கள். அப்போது பேனர் தவறி விழுந்து சிலர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சினிமாவை தடை செய்யலாமா? தேர்வை தையிரியமாக எதிர்க்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். நோயாளிகளை எதிர்கொள்ளும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பரீட்சைதான்” என்று கூறியுள்ளார்