90ஸ் கிட்ஸ்களின் நாயகன் சூப்பர் மேரியோவுக்கு 35 வயது

1985-ஆம் ஆண்டு நிண்டெண்டோ நிறுவனம் அறிமுகம் செய்த சூப்பர் மேரியோ வீடியோகேம் வெளியாகி ஞாயிற்றுக்கிழமையுடன் (13.9.2020) 35 ஆண்டுகள் ஆகிறது. இப்பொழுதும் பலரின் விருப்பமான விளையாட்டாக இது உள்ளது.

இது ஜப்பானிய வீடியோகேம் வடிவமைப்பாளரான Shigeru Miyamoto என்பவரால் 1981ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இது முதலில் கையடக்க வீடியோகேமாகவும் பின்னர் காலப்போக்கில் கணினி வீடியோகேமாகவும் உருமாற்றம் பெற்றது.

1995ம் ஆண்டில் இருந்து இன்றுவரை 40 கோடி வீடியோகேம்கள் உலகம் முழுக்க விற்கப்பட்டுள்ளன. 90ஸ் கிட்ஸ்களின் பிரதான வீடியோகேமும் சூப்பர் மேரியோ என்பது குறிப்பிடத்தக்கது.