மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்

கோவை மாவட்டம், பேரூர் வட்டம் தேவராயபுரம், இக்கரைபோளுவாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இன்று (12.09.2020) மகளிர் திட்டம், மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண் வாடகை இயந்திர மையம் அமைக்க, டிராக்டர், களையெடுக்கும் கருவி, மருந்து தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கினார். மேலும், பூலுவப்பட்டி, ஆலந்துறை பேரூராட்சி பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்ததுடன், கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தினை சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆலோசகர் சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.