கணினிநிரல் பயன்பாடு மற்றும் பயிற்சிக்குழு தொடக்க விழா

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை ஒருங்கிணைப்பில், கணினிநிரல் பயன்பாடு மற்றும் பயிற்சிக் குழுவின் (CODING AND PROGRAMMING CLUB) தொடக்கவிழா இணைய வழியில் (ZOOM) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைப்பேராசிரியர் இந்துமதி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைப்பேராசிரியர் விஷ்ணுகுமார் கலந்துகொண்டு தமது சிறப்புரையில் எதிர்காலங்களில் கணினியின் பயன்பாடு பற்றியும் அதில் அனைத்துத் துறை மாணவர்களும் பயன்பெற முடியும் என்பதையும் தகுந்த சான்றுகளுடன் எடுத்துரைத்தார். அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் கணினி நிரலின் (coding) அபரிவிதமான வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து கணினி என்பது ஒரு கலையாகும். அது ஒரு மனிதன் தான் என்ன எண்ணுகின்றானோ அல்லது கற்பனை செய்கின்றானோ அதை அப்படியே கண்முன்பாக நிறுத்தி நிகழ்த்திக் காட்டுகின்ற அரிய அற்புதங்களைச் செய்யவல்லது. இன்றைய காலகட்டத்தில் மனித இனத்திடமிருந்து பிரிக்க முடியாத ஏன் கற்பனையாகவும் கூடப் எண்ணிப் பார்க்க முடியாத உன்னத இடத்தைப் பெற்றுள்ள மாபெரும் சக்தியாகக் கணினித்துறை விளங்குகிறது என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களுடனான கலந்துரையாடலில் எழுந்த வினாக்களுக்குப் பயனுள்ள வகையில் விடையளித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 390 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெற்றுப் பயனடைந்தனர்.