கே.பி.ஆர். கலை கல்லூரியில் கணினி அறிவியல் மன்றத் தொடக்கவிழா

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் ஒருங்கிணைப்பில், கணினி அறிவியல் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கிஸ்ஃப்லோவ் வாலண்டீர், டிரீம் (Kissflow volunteer,Dream TN) நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கும் வியாபார நுனுக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பல்வேறு உதாரணங்களுடன் உரை வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலும் விற்பனை நிலையங்களாக மட்டும் இருக்கின்றன. இந்நிலை மாறி அனைவரும் உற்பத்தியாளர்களாக மாற வேண்டும் என்று கூறினார். பணிக்குத் தேவை ஒருவரின் கல்வியறிவு மட்டுமல்ல. அதையும் தாண்டி அத்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் வேண்டும் என்று உரையாற்றினார்.

இறுதியாக சிறப்பு விருந்தினர் கலந்துகொண்ட மாணவர்களிடையே கலந்துரையாடலின் மூலம் எழுந்த வினாக்களுக்குப் பயனுள்ள வகையில் விடையளித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 450 -க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குகொண்டு பயனடைந்தனர்.