திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு: மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதாக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், திமுக புதிய பொருளாளராக டி.ஆர்.பாலு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளருக்கு பொன்னாடை போர்த்தி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.