மாலை செய்திகள்

மக்கள் போராட்டம்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து இரண்டு பிரம்மாண்ட அணைகள் கட்டுவதை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள்:

தமிழகம் முழுவதும் புதியதாக 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிய படங்கள் –
தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை:

அரசு அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்த உடன்படிக்கை ஏற்படாவிட்டால், புதிய படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்படும் என தமிழ் நடப்பு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டாய கல்வி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:

கட்டாயக்கல்வி உரிமை சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளி வாரியாக வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிய அளவில் தசரா பண்டிகை நடைபெறும்:

பாரம்பரிய முறையில் நடைபெறும் தசரா திருவிழா கொண்டாட்டங்கள் சிறிய அளவில் நடைபெறும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு தெரிவிப்பு:

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்:

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாடகை ஹெலிகாப்டர் சேவை:

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவையை 2 தனியார் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

நாளை முதல்:

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை உயர்வு:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.39.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளை முதல் 6 நாட்களுக்கு…:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி:

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.