தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை  இணையவழி மூலம் பயன் பெறலாம்

கோவை மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை இணைவழி அமர்வின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று பரவல் முன்னிட்டு, கோவை மாவட்ட தொழில் மையத்தில் NEEDS, UYEGP மற்றும் PMEGP ஆகிய கடன் உதவி திட்டங்களுக்கான ஆலோசனைகள் தொழில் தொடங்க ஆலோசனைகள், மானியங்கள், தொழில் தொடங்க பிற துறைகளிலிருந்து அனுமதி பெறுதல், ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பு திட்டம் PMFME திட்டம் மற்றும் இதர திட்டங்கள் குறித்து விவரங்களை இணைவழி அமர்வின் மூலம், இணைய செயலி: Zoom Application, கூட்ட குறியீட்டு எண்(Meeting ID): 79287703871 கடவுச்சொல் (Pass Word): Gmdic பயன்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வியாழன் அன்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பொது மக்களது சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு காணொளி மூலம் பதில் அளிக்கப்படும். மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு 94435 65891 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.