கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் நவீன ட்ரோன்

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சமயத்தில் கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் கொரோனா பரவலை தடுப்பதில் தங்களது பங்களிப்பாக சொசைசர் ட்ரோன் எனும் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சொசைசர் ட்ரோன் (Socizer Drone) இக்கல்லூரியின் இயந்திரவியல் துறையைச் சார்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் பிரவின்குமார், பத்ரிநாத், மதியரசன், மற்றும் மயில்சாமி ஆகியோர் உதவி பேராசிரியர் சரவணன் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கி உள்ளனர்.

இந்த ட்ரோனானது பொது இடங்களில் கிருமி நாசினி சுலபமாகவும், வேகமாகவும் தெளிக்க உதவுகிறது.

தற்போது அன்லாக் செயல்முறை நடை பெற்று வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான தினசரி மற்றும் வார சந்தைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என்பதை இயந்திர வழி கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்துடன் கண்காணிக்க உதவுகிறது.

இந்த சொசைசர் ட்ரோனை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் உறுதுணையாக இருந்த இயந்திரவியல் துறையின் தலைவர் குணசேகரனையும், கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, பொது மேலாளர் முனுசாமி, கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் முதன்மை செயலாளர் ஏ எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.