மகிழ்ச்சியில் பெற்றோர்கள், வருத்தத்தில் இளைஞர்கள்

பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு சீன செயலிகளைத் தடை செய்து வருகிறது. இது வரை இரண்டு முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக மேலும் 118 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆன்லைன் விளையாட்டு செயலிகளில் ஒன்றான பப்ஜியும் இடம் பெற்றிருப்பதையடுத்து கேமிங் இளைஞர்கள் பலரும் திக்குமுக்காடி வருகின்றனர். ஆனால், பப்ஜி மட்டுமல்ல. கேரம், லூடோ போன்ற ஆன்லைனில் விளையாடும் வேறு சில பிரபலமான கேம்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

பொழுதுபோக்காக ஆரம்பித்து பலர் இதற்கு அடிமையாகியுள்ளார். இந்த ஆன்லைன் விளையாட்டுகள் ஊரடங்கு காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது. வெளியே எங்கும் செல்லமுடியாத நிலையில் தனியொரு உலகில் வலம் வரக்கூடிய அறிய வாய்ப்பு இதில் கிடைப்பதால் பலரும் இதன் மீது அதீத காதல் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் டிக்டாக் மற்றும் பப்ஜி உள்ளிட்ட செயலியை தடை செய்ததில் இருந்து இளைஞர்கள் பலர் மனவருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேசமயம் பெற்றோர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.