போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

கோவையில் தொடர்ந்து போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் இது குறித்து கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகும் போலீசார் குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் கடந்த ஒரு வாரத்தில் உயர் அதிகாரிகள் உட்பட 25 போலீஸார் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். நேற்று உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என இருவருக்கும் தொற்று உறுதியானது. கொரோனா தொற்றுக்குள்ளாகும் போலீசார் குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறியதாவது, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முழு ஊரடங்கு இருந்த போது பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. தற்போது போலீசார் சட்ட ஒழுங்கு போக்குவரத்து குற்ற சம்பவங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசாருக்கு பாதிப்பு அதிகரிக்கிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போலீசார் இது குறித்து கண்காணிக்க உதவி கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தகவல்களை தினமும் பெற்று உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார். அதன்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் 2500 போலீசாருக்கு சானிடைசா், முகக்கவசம், கையுறை, கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து போலீசாரும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.