அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 14 வது ஆண்டு விழா

கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 14 வது ஆண்டை கொண்டாடும் விதமாக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சினிமா துணை நடிகர் நடிகைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள்  வழங்கப்பட்டது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவங்கி  13 ஆண்டுகள் கடந்து 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் நிறுவனர் சரத்குமார், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை மாநகர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நகரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.முத்துராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டு பின்னர் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள கோவை ஸ்டார்  பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட சினிமா துணை நடிகர், நடிகைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் துணைசெயலாளர்கள் விஜயலிங்க துரை, ஆலடி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கென பிளாஸ்டிக் பக்கெட்,பெட்சீட்டுகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.பின்னர் கொரோனா கால நேரத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும் அரிசி மளிகை போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மாணவரணி செயலாளர் விஜய், இளைஞரணி செயலாளர் பங்க் மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கை சரவணன், உக்கடம் பகுதி செயலாளர் வேல் முருகன், அவை தலைவர் ஸ்டீல் ராஜன், பொருளாளர் சிங்க முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.