த.மு.மு.க வின் ரத்ததான முகாம்

கொரோனா கால நேரத்தில் கோவையில் அவசர நோயாளிகளுக்கு ரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக த.மு.மு.க வின் மருத்துவ சேவை அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கொரோனா காரணமாக மருத்துவ முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர தேவைக்கு ரத்தம் கிடைக்கும் வகையில், கோவை வடக்கு மாவட்ட த.மு.மு.க மருத்துவ சேவை அணி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது.

இதில் பலர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்தனர். த.மு.மு.க வின் 25 வது பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியாக நடைபெற்ற இதில், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் அஹமது கபீர், கொரோனா கால நேரத்தில் அவசர நேர சிகிச்சைகளுக்காக இது போன்ற ரத்த தான முகாம்களை நடத்துவதாக தெரிவித்தார். முன்னதாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்பாட்டிற்கென 152 வது ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.

இதில், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ்,  தொண்டரணி மாநில செயலாளர் சர்புதீன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முகமது ரபி, மற்றும் நிர்வாகிகள் அம்ஜத்,  ரஜாக், ஆஷிக், சிராஜ்தீன், மைதீன், மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.