ஹாலிவுட் ஆல்பம் தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ்

முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக ஹாலிவுட்டில் ஆல்பமொன்றைத் தயாரித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்களும் பெரிய ஹிட் ஆகியுள்ளது..

தற்போது ஹாலிவுட்டில் ஆல்பமொன்றைத் தயாரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ‘கோட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.