மவுண்ட்பேட்டன் நினைவு தினம்

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழு பெயர் லூயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன்.

இவர் தன்னுடைய திறன் மற்றும் கடும் உழைப்பினால் பல முக்கிய உயர் பதவிகளைப் பெற்றார். கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்து கேப்டன் பதவியையும் பெற்றார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரிப்பதற்குமான விவகாரங்களைத் திறமையுடன் கையாண்டார்.

இவர் ஜுன் 21, 1948 ஆம் ஆண்டு வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் வார் மெடல், விக்டரி மெடல், அட்லாண்டிக் ஸ்டார், பர்மா ஸ்டார், இத்தாலி ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பதக்கங்களையும், விருதுகளையும் வென்றுள்ளார். இவர் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி மறைந்தார்.