இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா இன்று( 28.3.17) நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்ககால புராணங்களை நினைவுப்படுத்தும் வகையில் கடையேழு வள்ளல்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் மற்றும் சங்க கால கவிஞர்கள் போல மாணவர்கள் வேடமிட்டு, சங்க கால புராணங்களை மாணவர்களிடத்தில் எளிமையான முறையில் எடுத்துரைத்தனர். மேலும் விழாவில் தமிழ் சார்ந்த பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

முத்தமிழ் மன்றம் தொடக்க விழாவில் கடையேழு வள்ளல்களின் வேடமிட்ட மாணவர்கள்.