நடிகர் டி.எஸ்.பாலையா பிறந்த தினம்

தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும்.

இவர் துவக்கக் காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகிய திரைப்படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகைக் கலக்கிய டி.எஸ்.பாலையா 1972 ஆம் ஆண்டு ஜுலை 22 ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார்.