மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு மானியம்

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் – 2020 – 21ன் கீழ் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கிட எதுவாக ரூ. 75.75 லட்சங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான பண்ணைகளை தேர்வு செய்து பின்னிலை மானியமாக (BACKENDED SUBSIDY) மீன்குஞ்சிகள், உரங்கள் மற்றும் மீன் தீவனத்திற்கான உள்ளீட்டு மானியம் ரூ. 75,000/ ஹெக்டேர் வழங்கப்படும். மேலும் பயன்பெறும் மீன்வளர்ப்போர் மீன்வளத்துறையின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தின் கீழும் பயன்பெறாதவராக இருக்க வேண்டும்.

எனவே விருப்பமுள்ளவர்கள் எண் 41, சோமு காம்ப்ளக்ஸ், 1 – இஸ்மாயில் தெரு, சி.எஸ்.ஐ பள்ளி அருகில், டவுன் ஹால், கோயம்புத்தூர் – 641001 என்ற முகவரியில் உள்ள கோவை மீன்வள ஆய்வாளர் (எண் : 9655506422) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.