பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : போலீசார் பறிமுதல்

கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவையில் சிலர் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று (22.8.2020) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதிகளுக்குச் சென்று விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்தும் தடையை மீறி சிலைகளை பிரதிஷ்டை செய்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது வரை கோவையில் ஆர்.எஸ் புரம், சுந்தராபுரம், சரவணம்பட்டி மற்றும் ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 8 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பாக 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையின் பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

அதன்படி கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் வைக்கப்பட்ட இரண்டு விநாயகர் சிலைகள் மற்றும் ஆர்.எஸ் புரம், சுந்தராபுரம்,ரத்தினபுரி பகுதிகளில் இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட்டிருந்த 5 விநாயகர் என 7 சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.