ஆர்.வி.கலை கல்லூரி சார்பில் விதை விநாயகர் உருவாக்கம்

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதை விநாயகர் சிலை உருவாக்கம் செய்து மண்ணில் பதிவு செய்யும் இந்நிகழ்வு நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கல்லூரியின் மாணவ, மாணவிகள் களிமண்ணால் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து அதில் காய்கறி விதைகளை வைத்து கல்லூரி வளாகத்தில் உள்ள பசுமை குடிலில் அது வளர்வதற்கான வளர்பைகளில் வைக்கப்பட்டது. இதில் கீரை வகைகள்,காய்கறி விதைகள், மூலிகை விதைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. மாணவர்கள் தயாரித்த விநாயகர் சிலையினை அந்தந்த விதையின் பெயர்கள் வைக்கப்பட்ட பைகளில் உள்ள மண்ணில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வானது மாணவ, மாணவியரிடையே படைப்புத் திறனை வளர்க்கும் விதமாகவும் அனைவருக்கும் சுற்றுப்புற சூழலை காக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.

மேலும் இயற்கையைக் காக்கும் வகையில் ரசாயனங்களால் நீர் மாசுபடுவதை தடுப்பதோடு, மண்ணால்  செய்யப்பட்ட விதை விநாயகர் நீரில் கரைந்து தாவர வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு கல்லூரியின் தொழில் முனைவோருக்கான மேம்படுத்தும் அமைப்பின் கீழ் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.