கொரோனா மாதத்தின் திங்கள் கிழமை

கொரோனா மாதத்தின்திங்கள்கிழமை

பள்ளியில்குவிந்தபெற்றோர் கூட்டம்.

 

ஆன்லைன் வகுப்புகள் அனலாய் பறக்க

அரசு பள்ளிகளில் ஆரம்ப கல்வி சேர்க்கை துவங்கியது.

 

பல மாடி பள்ளியின்

பேருந்து வரிசையில் நின்ற பெற்றோர்கள்,

இன்று அரசு பள்ளியில் சேர்க்கைக்கு நிற்கின்றனர்.

 

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை

அனைவரும்  உணர்ந்தது நான் அறிந்த வரையில்

இந்த கஷ்ட காலத்தில் தான்.

 

குடும்ப வறுமை, வேலையிழப்பு, வருமான குறைப்பு

என எண்ணற்ற வலைகளில் சிக்கிய

எறும்பாய் துடித்து கொண்டிருக்கிறோம்.

 

கை விட்டு விரல் விலகாது,

கல்வி ஒருபோதும் கைவிடாது.

 

இதனால் இதன் தரம் மேலும் உயருமா?

அரசு பள்ளிகளின் ஆளுமை ஆரம்பமா? இல்லை

இது அடக்கி ஆண்ட கொரோனா கொடூரன்

கொடுத்து சென்ற வரமா? சாபமா?