சுவையான பாஸ்தா பாயாசம் செய்ய எளிமையான ரெசிபி

நம்மில் பலருக்கும் இனிப்பு வகைகளை பார்த்தாலே சுவைக்க தூண்டும். அதிலும் பாயாசம் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. அந்த பாயாசத்தை பாஸ்தாவில் செய்தால் எப்படி இருக்கும் ?. வாங்க பாஸ்தா பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்..

பாஸ்தா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் :

பாஸ்தா – 1 1/4 கப்

பால் – 3 கப்

சர்க்கரை – 1/2 கப்

ஏலக்காய் – 1/2 tsp

நெய் – 1 tsp

முந்திரி – 5

செய்முறை :

முதலில் தண்ணீரில் பாஸ்தாவை வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கிண்ணம் வைத்து பால் கொதிக்க வையுங்கள். பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து கலக்குகள். அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து கிளறுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு சிறு தீயில் கொதிக்க வையுங்கள். தேவையான பதம் வந்ததும் நெய் முந்திரி போட்டு தாளித்து பாயாசத்தில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா பாயாசம் ரெடி.