பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின விழா

கோவையில் (15.8.2020) சுதந்திர தினத்தன்று பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Fresh N spa – நிர்வாக இயக்குநர் விஜய் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மேலும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, சமூகசேவகர், சக்திவேல் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், முகக்கவசங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், பிரகாஸ், தினேஸ் சரவணன், இளங்கோ, கமலகண்ணன், மணி, கார்த்திக், ராஜேஸ், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.