பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டி கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மெது மெதுவாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் அல்லது அரபு நாட்டில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் ஐபிஎல் போட்டி ஆண்டிற்கு ஒருமுறை நடைபெற்றாலும் அந்த ஆண்டுமுழுவதும் அதன் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். அந்த போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வில்லை என்பது ஒரு வருத்தமாக இருந்தாலும், இந்த சூழ்நிலையிலும் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பது ஆறுதல் தரக்கூடுய ஒன்றாக உள்ளது.

இந்த வகையில் ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சிகள் துவங்கி விட்டது. இந்த ஐபிஎல் போட்டிகளில் என்றும் மறையாத ஒரு அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இதற்கான மவுசு எப்பொழுதும் குறையவே குறையாது. அதுவும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி உள்ளவரை அதற்கான வாய்ப்புகளே இருக்காது.

பயிற்சிகள் துவங்கியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.