ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

முதுகலை மருத்துவ சேர்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஓபிசி இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஓபிசி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் இந்த கல்வி ஆண்டிலேயே ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்க வேண்டும் என அனைத்து ஓபிசி சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள். எனவே, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனே நிரப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.