நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள் !

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், பழச்சாறுகள் போன்றுதான் சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை, பணம் அதிகம் செலவு செய்யவும் தேவையில்லை. நம் வீட்டில் தினசரி உபயோகப்படுத்தும் உணவு பொருட்களே போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த எளிமையான வழிகள் என்னவென்று இப்போது பார்ப்போம்.

கீரை : கீரை வகைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு.

மஞ்சள் பால் : ஒரு கிளாஸ் பாலுடன் சிட்டிகை மஞ்சள் துண்டு இஞ்சி தட்டிப்போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வாருங்கள்.

கருப்பு கொண்டைக் கடலை : கருப்பு கொண்டைக் கடலையில் இரும்பு சத்து அதிகம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் எளிதில் கிடைக்கும்.

ராகி : ராகி கஞ்சி, ராகி புட்டு என அதில் வகை வகையாக சமைத்து சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து அதிகம்.

ஊறுகாய் : ஊட்டச்சத்து நிபுணர்கள் வீட்டில் தயாரிக்கும் எலுமிச்சை, நெல்லிக்காய், மாங்காய் ஊறுகாயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனக் கூறுகின்றனர். எனவே அதையும் தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.