இணைய வழியில் இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி விழா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால்,  கோவையில் புகழ்பெற்ற இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் சார்பாக இந்த விழாவை கோவில் நிர்வாகம் இணையத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

மஹா விஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த நாளான இன்று (11.8.2020), பக்தர்கள் தங்களது வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிவித்து, வீட்டிற்குள் அழைத்து வருவது வழக்கம், இது ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தை வடிவத்தில் வீட்டிற்குள் வருவதாக நம்பிக்கை. மேலும் தமிழகத்தை பொருத்தமட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இன்று வட மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மதுராவில் மாநில மக்கள் இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள். ததமிழகத்தில் அடுத்த மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் பெருமாள் கோவில்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.