கே.பி.ஆர். கலை கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இணைய வழி வரவேற்பு விழா

 

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான   “பிரவர்தனா – 2020” எனும்  இணைய வழி வரவேற்பு விழா நடைபெற்றது.

கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த இணைய வழி வரவேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்.கே.ஆர். குழுமங்களின் தலைவர் ஆர்.கே. ராமசாமி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பாலுசாமி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்க தலைமையேற்று பேசிய கே.பி. ராமசாமி மாணவர்களுக்கு இயற்கையை நேசிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக இருக்கவும் வழிகாட்டுதல்கள் வழங்கினார். மேலும், நல்ல இயற்கையான காற்றோட்டத்துடன் கூடிய வளாகம், வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பிறகு பயன்படுத்திச் சிறந்த பணி வாய்ப்புக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றார்.

கணினி அறிவியல் புலத்தலைவர் சசிகலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களை நோக்கி இந்தக் கல்லூரியில் படிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் எனக்கூறினார். ஆனந்தம், மகிழ்ச்சியை எதிர்பார்த்திருக்கும் இந்தப் பருவம்தான் உங்களுக்கு வாழ்க்கையை, எதிர்காலத்தைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும். கிடைக்கும் நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்தி உழைத்துச் சாதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும், திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இருக்கும் இடத்தில் முதன்மையானவராக இருங்கள். உங்கள் மீதான சமுதாய மதிப்பினை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் பெற்றோரின் விருப்பம், உங்கள் ஆசிரியர்களின் விருப்பம்,கேபிஆர் கல்லூரியின் விருப்பம். ஆகவே, பயிற்சி, ஆர்வம், ஈடுபாடு, அனுபவம், உழைப்பு முதலியவற்றில் சிறந்து வெற்றியடையுங்கள் என முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களைச் சிறப்புரையாக வழங்கினார்.

இணையவழியில் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.