கோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று

கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை மற்றும் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 1 வயது பெண் குழந்தை உட்பட மொத்தம் 217 பேருக்கு இன்று (9.8.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று (9.8.2020) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு: கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், 27 வயது ஆண், மற்றும் 47 வயது பெண்.  வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 33 வயது பெண் மற்றும் 23 வயது ஆண். பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், 85 வயது பெண், 12 வயது சிறுவன், 59 வயது பெண் மற்றும் 17 வயது சிறுமி.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆண், 46 வயது ஆண், 78 வயது ஆண் மற்றும் 37 வயது ஆண் மேலும் 10 பேருக்கு மேற்பட்டோர்.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண், 19 வயது பெண் மற்றும் 24 வயது ஆண். உக்கடம் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண்.

காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி. மஹாவீர் ஜெயின் காலனி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், 43 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி.

சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது ஆண், 59 வயது பெண், 33 வயது ஆண், 58 வயது ஆண் மற்றும் 50 வயது பெண்.

சூலூரை சேர்ந்த 40 வயது பெண், சிந்தாமணி புதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை. செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை

அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், 29 வயது ஆண், 10 வயது பெண் குழந்தை.

உள்ளிட்ட 217 பேர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்படி கோவையில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 670ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்

கோவையில் இன்று 217 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 185 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.