நேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நிபந்தனையற்ற முழு ஊரடங்கு என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் 2வது ஞாயிறான இன்று (9.8.2020) நிபந்தனை இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து வகையான கடைகளும் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்பதால் நேற்று (8.8.2020) மதியம் முதலே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39.5 கோடி ரூபாய்க்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல சென்னையில் ரூபாய் 20 2.56 கோடி ரூபாய்க்கும், மதுரையில் 44.5 55 கோடி ரூபாய், சேலத்தில் 40 1.20 கோடி ரூபாய்க்கும், திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 40 1.67 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூபாய் 189 புள்ளி 38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது