கன்னட இலக்கியப் படைப்பாளி விநாயக கிருஷ்ண கோகாக் பிறந்த தினம்

விநாயக கிருஷ்ண கோகக் ஆகஸ்ட் 9, 1909 அன்று பிறந்தார். இவர் ஒரு கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்னடத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த ‘பாரத சிந்து ராஷ்மி’ என்ற காவியத்துக்காக 1990இல் ஞானபீட விருது பெற்றார். இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர். இவர் தார்வார் கர்நாடகக் கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேறினார். 1938இல் நாடு திரும்பியதும், சாங்லி விலிங்டன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.

இவர் தனது 82ஆம் அகவையில் ஏப்ரல் 28, 1992 ஆம் ஆண்டு மறைந்தார்.