நல்லறம் அறக்கட்டளையுடன் பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினம் சேர்ந்து ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் திட்டம்  துவக்கம்

கோவையில் நல்லறம் அறக்கட்டளையுடன் இணைந்து பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினம் சார்பாக பொதுமக்களுக்கு நேரடியாக ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் திட்டம்  துவங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் எனும் ஹோமியோபதி மருந்தை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கோவை நல்லறம் அறக்கட்டளை சார்பாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினத்துடன் இணைந்து பேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று இந்த மருந்துகளை வழங்கும் திட்டம் பேரூர் தமிழ் கல்லூரியில் துவங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் பேரூராதினம் மருதாசல அடிகளார் மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ். பி. அன்பரசன் ஆகியோர் மருந்துகள் வழங்க செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரூராதினம் மருதாசல அடிகளார், கொரோனா கால ஊரடங்கு துவங்கியது முதல் மக்களின் அன்றாடம் மக்களின் பசிப்பிணியை போக்கிய நல்லறம் அறக்கட்டளை தற்போது கொரோனா பரவாமல் தடுக்க எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஹோமியோபதி மருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாகவும், தற்போது இந்த பகுதியில் விநியோகம் செய்ய பேரூர் தமிழ்மன்றம் இந்த சமூக பணியில் இணைந்துள்ளதாக கூறினார்.