இந்த பிரச்னை உள்ளவர்கள் கொரோனாவிடமிருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் !

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அனைத்து வயதினரையும் தாக்குகிறது இந்த கொரோனா வைரஸ். அதுமட்டுமின்றி நம் உடலில் சில நோய்கள், பிரச்னைகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது. அவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 71 சதவீதம் இறந்தவர்கள் ஏற்கனவே உடலில் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றன ஆய்வு.

உடல் எடை அதிகம் கொண்டவர்கள் : உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் தாக்கும் என பல ஆய்வுகள் வந்துள்ளன. இவர்களுக்கு நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்கிறது. எனவே வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் அதைவிட கூடுதலாக 30% அதிகரித்திருந்தாலே ஆபத்துதான் என்கிறது.

சர்க்கரை நோய் : சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கெனவே சர்க்கரை அளவு இரத்ததில் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே இது கொரோனா நோய் தொற்று எளிதில் தொற்றிக்கொள்ளும். இதனால் இவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

புற்றுநோய் : புற்றுநோயால் பாதிப்பட்டிருப்போர், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்போர் கொரோனாவிடமிருந்து விலகியிருக்க பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுதல் அவசியம்.

இரத்த அழுத்தம் : கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த அழுத்தம் உடலுக்கு ஆபத்தானது. இது கொரோனா தாக்குதல் மட்டுமல்ல படபடப்பு, அழுத்தம் காரணமாகவும் இதன் தாக்கம் உண்டாகும்.

சிறுநீரகம் : சிறுநீரகத் தொற்று, சிறிநீரக பாதிப்பால் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்போர் நோய் எதிர்ப்பு சக்தியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இதுவும் கொரோனா எளிதில் தாக்க நல்ல காரணம்.

மூச்சுக் குழாய் : மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுக் குழாயில் பாதிப்பு , நுரையீரல் பாதிப்பு எனில் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் இருப்போர் அதற்குறிய மாத்திரைகள், சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்றுவது நல்லது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயங்களைக் கடைபிடிக்கவும் மறந்துவிடாதீர்கள். கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் இடங்கள், மக்களை சந்திப்பதை தவிருங்கள்.