கோவையில் நேற்று 698.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது !

கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று (4.8.2020) பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் கோவையில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 698.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு பின்வருமாறு:

சின்னக்கல்லார் பகுதியில் 160 மில்லி மீட்டர் மழை, வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் 105 மில்லிமீட்டர் மழை, கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8.7  மில்லி மீட்டர் மழை, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 88 மில்லி மீட்டர் மழை, வால்பாறை தாலுகாவில் 87 மில்லி மீட்டர் மழை, சூலூர் பகுதியில் 3.5 மில்லி மீட்டர் மழை,  பொள்ளாச்சி பகுதியில் 19 மில்லி மீட்டர் மழை, ஆழியாறு பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை, கோவை தெற்கு பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை, சோலையாறு பகுதியில் 180 மில்லி மீட்டர் மழை என கோவையில் நேற்று ஒரே நாளில் 698.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 49.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.