தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் 14 நாட்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைக்கிறார்.

கொரோனா நோய் தொற்று பரவிய நாளிலிருந்து தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கக்கூடிய பணிகளை அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கும் இந்த நிவாரணம் பொருட்கள் வழங்கப்படுமென அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். மேலும் முதல்கட்டமாக கோவை புதூர் பகுதியில் இருக்கக்கூடிய சின்னச்சாமி மண்டபத்தில் பாதிப்புக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு இந்த தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.