‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020’ நிகழ்ச்சியில் கோவை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (1.8.2020) மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2020 நிகழ்ச்சியினை காணொளி மூலம் நடத்தியது.

இம்முறை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை மற்றும் பீகார் அரசுடன் இணைந்து காணொளி மூலம் இந்த நிகழ்ச்சியினை இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்த உள்ளது.

இதில் ஆறு சமூகப் பிரச்சனைகளுக்கு இந்தியா முழுவதும் 27 மாணவ குழுக்கள் மொத்தம் 164 பேர்கள் தங்களின் இடங்களில் இருந்து காணொளி மூலம் தீர்வு காண உள்ளனர். மாணவர்களின் தீர்வு மற்றும் ஆராய்ச்சியினை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நான்கு முறையாக இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியினை இக்கல்லூரி நடத்தி வருவதுடன், இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இக்கல்லூரி நடத்தும் ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று மாணவர்களிடையே கலந்துரையாடினார். இவர் தமிழகத்தில் இக்கல்லூரியில் நடைபெறும் போட்டியாளர்களிடையே மட்டும் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசியபோது, இந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேனட், மெக்கானிக்கல் துறைத் தலைவர் பி.அசோக வர்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.