8 அடி நீள பாம்பை வெறும் கையில் பிடித்து ஆச்சரியப்படுத்திய நபர்!

என்னதான் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் பாம்பை கண்டால் நடுங்கதான் செய்வான். ஆனால், கோவை செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் 8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்து அனைவரையும் ஆச்சரியபடுத்தினார். இவர் பாம்பை பிடித்து வரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒருவீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் பரவியது. இதை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அங்கு குவிந்துவிட்டனர். அதற்குள் அந்த பாம்பு அருகில் இருட்டாக இருந்த ஒரு புதருக்குள் சென்றுவிட்டது.

கூட்டத்தில் இருந்த குமார் என்பவர் கையில் ஒரு டார்ச் லைட்டுடன் அந்த புதருக்குள் சென்று, சிறுது நேரம் கழித்து சுமார் 8 அடி நீளமுள்ள பாம்பை கையில் பிடித்து இழுத்து வந்தார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து கூச்சலிட்டனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியே எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.