கொரோனாவின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்!

– உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலகநாடுகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் எப்பொழுது குறையும் என்ற கேள்வியுடன் இருக்கும் இந்த சூழ்நிலையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் மற்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளிலும்  தற்போது பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது வருத்தமளிப்பதாக கூரியுள்ளார்.

தகவல்  bit.ly/2XgztTo