பிளஸ் 1 தேர்ச்சி – கோவை முதலிடம்

கோவை மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (31.7.2020) பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கோவை மாவட்டம் 98.10 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு கோவை 97.6 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு 2 இடத்தை முன்னேறி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 2,716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பாடப்பிரிவுகளை பொறுத்தவரையில்

  • இயற்பியல் – 96.68 சதவீதம், வேதியியல் – 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
  • உயிரியல் – 97.64 சதவீதம், கணிதம் – 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
  • தாவரவியல் – 93.78 சதவீதம், விலங்கியல் – 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி
  • கணினி அறிவியல் – 99.25 சதவீதம், வணிகவியல் – 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி
  • கணக்குப் பதிவியியல் – 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கரூர் மாவட்டம் 97.51 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.