3 காவலர்கள் உட்பட 303 பேருக்கு தொற்று

கோவை : இன்று (30.7.2020) அன்னூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள், மத்திய பாதுகாப்புப் படை வீரர் உட்பட 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், அன்னூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 39 வயதான ஆண் காவலர் மற்றும் பெண் காவலருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கணபதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 40 வயது ஆண் காவலருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், செல்வபுரம் பகுதியில் 14 பேருக்கும் , குனியமுத்தூர் பகுதியில் 8 பேருக்கும், கணபதி பகுதியில் 7 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த தலா 5 பேருக்கும், சூலூரிலும், பீளமேடு பகுதியிலும் தலா 4 பேருக்கும் என இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக உயர்ந்துள்ளது.