மாஸ்க் அணிவது குறித்து விளக்கும் நடிகை மலைக்கா அரோரா

கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர். ஆனால் முகக்கவசத்தை அவ்வபோது மூக்கை மூடாமல் மூக்கின் கீழ் வரை இறக்கிவிட்டுக் கொள்வதும், கழுத்தில் போடுவது என அவரவர் வசதிக்கு ஏற்ப அணிந்துகொள்கின்றனர்.

இது சௌகரியம் சார்ந்த விஷயம் மட்டுமன்றி உயிரை பாதுகாக்கும் கவசம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிற வகையில் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக் கூடாது என்பதை டெமோ காட்டியுள்ளார். அதில் மூன்று விதமாக மக்கள் மாஸ்க் அணிவதை சுட்டிக்காட்டி எது சரியானது என்பதை டிக் செய்துள்ளார்.

எனவே மக்கள் இனியாவது முகக்கவசம் அணியாமல் கொரோனா தொற்றுக்கு பயந்து அணியுங்கள் என்பதை வலியுறுத்துகிறார் மலைக்கா அரோரா