கோவை ஞானி ஆழமான அறிவுகொண்ட பேராளுமை

– ஓசை காளிதாசன்,

நிகழ்காலத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் இருந்தாலும், அரசியல், சமூகம், வரலாறுஆகியவற்றில் ஆழமான அறிவுகொண்ட இவர் அவர்களில் ஒரு பேராளுமை. இவரது இடத்திற்கு வேறு ஒருவர் நிச்சயமாகக் கிடையாது.
ஞானிஎன்றபெயரை வைத்துக்கொள்ள எல்லாவகையிலும் தகுதியுடையவர். 1990களில் இவருக்கு பார்வை போனது.இருப்பினும், இருந்தவரை இவருக்கு வரும் அனைத்து புத்தகங்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பார்.அந்தளவுக்கு தமிழ் மீது ஆழமான காதல் கொண்டவர்.
இவரது நிழல், தமிழ்நேயம் பத்திரிகை மூலமாக பல்வேறு உலக செய்திகளை ஆழமாக அறிந்தேன். “கீழை மார்க்சியம்” என்பதை இவர் மூலமே நுனி முதல் அடிவரை தெரிந்தேன்.
மதுரை நிகழ்ச்சி ஒன்றிற்கு இவருடன் பேருந்தில் பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை. இவரது வீட்டிற்கு எப்பொழுது சென்றாலும், இவரும் துணைவியாரும் புன்னகையுடன் வரவேற்பார்கள்.அந்த முகங்களை எப்பொழுதும் மறக்க முடியாது. இவரது உடல் சுகமற்ற நாட்களில் உதவமுடியாத குற்றஉணர்வுடனே இருந்து வருகிறேன். கோவைக்கு மிகப்பெரிய இழப்பு.