வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வீட்டை எளிதில் சுத்தம் செய்யலாம் !

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எல்லோரும் கண்ணாடி, ஃபிரிட்ஜ், கழிப்பறை என அனைத்துக்கும் தனித்தனியே பொருட்களை வாங்கி செலவு செய்துக் கொண்டிருக்கிறோம். இப்படி செலவு செய்வதைவிட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிய முறையில் சுத்தம் செய்யலாம். அது என எவ்வாறு என்பதை இப்பொழுது பார்ப்போம்.

ஜன்னல் கதவுகளை சுத்தம் செய்ய வினிகரை தண்ணீரில் கலந்து சாக்ஸ் துணியினை அதில் நனைத்து துடைக்கலாம்.

வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ், மைக்ரோ ஓவன் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு லெமன் ஆயில் கொண்டு துடைத்தால் சுத்தமாகும். வாசனை நன்றாக இருக்கும்.

கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய, வழப்பான பொருட்களை பளபளப்பாக்க ஷேவிங் கிரீமை தடவி 15 நிமிடங்கள் கழித்து துடைத்தால் நீங்காத கரைகள் கூட நீங்கி பளபளக்கும்.

சீலிங் ஃபேனை துடைக்க தலையணை உறையை விசிறிகளில் விட்டு அப்படியே வழித்து துடைத்து எடுத்தால்  தூசிகள் பறக்காமல் உறையில் தேங்கிவிடும்.

கட்டில் , சோஃபா, டைனிங் டேபில் போன்ற மரச்சாமான்களை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பருத்தி துணியால் தொட்டு துடைத்து எடுக்க பளபளக்கும். இது லெதர் சோஃபாக்களை துடைக்கவும் வசதியாக இருக்கும்.

கழிப்பறையில் உள்ள கறைகள், அழுக்குகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை தூவி 10 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் தேய்த்தால் எளிதில் நீங்கிவிடும்.