உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தாக்குமா ?

உடல் பருமன் அதிகம் உள்ளவர்களை கொரோனா நோய் தொற்று எளிதில் தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகளின்படி இந்தியாவில் 5 சதவீத மக்கள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரிவிக்கின்றன. அந்தவகையில் உலக அளவில் 40சதவீத  மக்கள் அதிகரிப்பார்கள் என்கிறது. தற்போது இந்த லாக்டவுனினால் உடல் எடை இன்னும் அதிகரித்திருப்பதாக சில ஆய்வுத் தரவுகளை காணக்கூடுகிறது.அப்படி இந்த ஆய்வில் 812 நோயாளிகளில் 70சதவீத பேர் உடல் பருமனாக இருந்துள்ளனர். அதில் 82சதவீத பேர் கொரோனா தீவிரமடைந்து இறந்துள்ளனர். அப்படி மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில் உடல் பருமன் கொண்டவர்களே அதிகம் இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிரித்து பாதுகாப்பு அம்சங்களை முறையாக்க கையாளுவதும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நேரத்தில் உடல் பருமன் கொண்டவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள். கிரீன் டீ குடிப்பதும் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொழுப்புக்களை கரையவும் உதவும். உடல் பருமன் கொண்டவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள்.